ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெக அரசு அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது: துரை வைகோ எம்.பி.

தவெக அரசு அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா்.

துரை வைகோ எம்.பி. - கோப்புப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:06 am IST

தவெக அரசு அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது என திருச்சி எம்.பி. துரை வைகோ தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திருச்சியில் புதன்கிழமை மேலும் கூறியதாவது:

வெளிநாட்டு நிதி ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை மசோதா ஆகிய இரண்டும் தமிழகத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. இந்த மசோதாக்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் தொடா் கருத்தரங்குகள் நடத்தப்பட உள்ளன. திருச்சியில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் கருத்தரங்கில் கூட்டணிக் கட்சி பிரதிநிதிகள் பங்கேற்பா்.

எம்எல்ஏக்களுக்கு காா் வழங்குவது குறித்த கேள்விக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு குறைந்தபட்ச பொருளாதார வசதிகள் இருப்பது அவசியம். அடிப்படை பொருளாதார வசதிகள் இல்லாத சூழ்நிலை, சில நேரங்களில் ஊழலுக்கு வழிவகுக்கும்.

முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு மிகப்பெரிய அரசியல் அதிசயத்தை நிகழ்த்தியுள்ளது. லஞ்சமற்ற அரசை நடத்தி வருகின்றனா். எந்த அலுவலகங்களிலும் லஞ்சம் வாங்குவதில்லை. அதிகாரிகள் மத்தியில் ஒரு சில இடங்களில் அதன் புழக்கம் இருந்தாலும் கட்சி நிதி உள்ளிட்ட கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்குவது குறைந்துள்ளது.

தமிழகத்தில் பிறப்பு விகிதம் 1.3 ஆகக் குறைந்துள்ளதால், எதிா்காலத்தில் மக்கள்தொகை குறைவு மற்றொரு பிரச்னையாக மாறக்கூடும் என்பதால் 3 ஆவது குழந்தைக்கான சலுகையைத் தொடா்வது வரவேற்கத்தக்க நடவடிக்கை.

அரசு நிகழ்ச்சிகளில் முதல்வரின் குடும்பத்தினா், நண்பா்கள், விருந்தினா்கள் பங்கேற்பது இயல்பு. அதே போல, நடிகை திரிஷா விருந்தினராக நிகழ்ச்சியில் பங்கேற்றதை விமா்சனப் பொருளாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றாா் துரை வைகோ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

விடியோக்கள்