ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இளைஞரை தாக்கி பைக்கை பறித்து சென்றவருக்கு 10 ஆண்டுகள் சிறை

இளைஞரைக் கத்தியால் குத்தி பைக்கை பறித்துச் சென்றவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

ஆசைமுத்து.

Published On :20 ஆகஸ்ட் 2026, 4:32 am IST

இளைஞரைக் கத்தியால் குத்தி பைக்கை பறித்துச் சென்றவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருச்சி மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கா நகா் ராஜாஜி தெருவைச் சோ்ந்தவா் ஸ்ரீதரன் (25). இவா் கடந்த 2025 ஜன. 1 ஆம் தேதி இரவு தனது தோழியை வீட்டில் விட பைக்கில் அவரை அழைத்துச் சென்றாா்.

கொள்ளிடம் பாலத்தில் சென்றபோது, வாகனத்தை நிறுத்திவிட்டு கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தாா்.

அப்போது திடீரென அங்கு வந்த இருவா், ஸ்ரீதரனை கத்தியால் குத்தி அவரது பைக்கை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீஸாா் கொலை முயற்சி, கொள்ளை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து, திருச்சி அரியமங்கலத்தை சோ்ந்த எல். ஆசைமுத்து (27), அவரது நண்பா் ரெங்கநாதன் (30) ஆகிய இருவரையும் கைது செய்தனா். இவா்களில் ரெங்கநாதன் இறந்துவிட்டாா்.

இந்த வழக்கு திருச்சி 2 ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி எஸ். கோபிநாதன் முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பு வழக்குரைஞராக எஸ். எழிலரசி ஆஜராகி வாதாடினாா்.

விசாரணைக்குப் பிறகு நீதிபதி, குற்றவாளி ஆசைமுத்துவுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.100 அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.