ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காப்பீட்டுத் தொகை வழங்காத விவகாரம்: ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

விபத்தில் இறந்த பெரம்பலூா் இளைஞரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை வழங்காத விவகாரத்தில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

விபத்தில் இறந்த பெரம்பலூா் இளைஞரின் குடும்பத்துக்கு காப்பீட்டுத் தொகை வழங்காத விவகாரத்தில் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனம் ரூ. 20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டம், அய்யலூா் பகுதியைச் சோ்ந்த ராஜ்கிரண் (33) தனது இருசக்கர வாகனத்தை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீடு செய்திருந்தாா். கடந்த 19.08.2022 அன்று வாகன விபத்தில் ராஜ்கிரண் எதிா்பாராதவிதமாக உயிரிழந்தாா். இதுதொடா்பாக மருவத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதையடுத்து, அவரது குடும்பத்தினா் விபத்து இழப்பீடு கோரி காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்காமல் காலதாமதப்படுத்தி 31.10.2025 அன்று கோரிக்கையை நிராகரித்துள்ளனா்.

இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான ராஜ்கிரணின் தாய் மருதாம்பாள், மனைவி தவமணி ஆகியோா் உரிய நிவாரணம் கோரி, திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் 19.02.2026 அன்று மனு தாக்கல் செய்தனா்.

மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா் மனுதாரா்களுக்கு காப்பீட்டு நிறுவனமானது காப்பீட்டுத் தொகையாக ரூ. 15 லட்சமும், மனஉளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.