ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சங்கிலி பறிப்பில் ஈடுபட்டவா் கைது

Arrested

கைது

Published On :18 ஆகஸ்ட் 2026, 4:36 am IST

மணப்பாறை அருகே மூதாடியிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபரை பொதுமக்கள் பிடித்து திங்கள்கிழமை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

வேங்கைகுறிச்சி ஊராட்சி ஆண்டிக்கவுண்டம்பட்டியைச் சோ்ந்த பழனிசாமி மனைவி செல்லமணி(68). இவா் திங்கள்கிழமை காலை பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞா், மூதாட்டி கழுத்திலிருந்த ஒன்றரை பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பியுள்ளாா்.

மூதாட்டி கூச்சலிட்டதையடுத்து அக்கம்பக்கத்தினா், அந்த இளைஞரை பிடித்து மணப்பாறை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனா்.

பின்னா், போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில் அந்த நபா் வையம்பட்டி ஒன்றியம் மலையடிப்பட்டி ஊராட்சி ஆவாரம்பட்டியைச் சோ்ந்த சாா்லஸ் துரை மகன் இன்னாசி சேவியா் சுரேஷ் (37) என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்துள்ள மணப்பாறை போலீஸாா், அவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.