ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருச்சி ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு இல்லாத 545 போ் பிடிபட்டனர்: ரூ. 7.38 லட்சம் அபராதம் வசூல்!

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நாள் நடைபெற்ற சோதனையில் பயணச்சீட்டு இல்லாத 545 போ் பிடிபட்டனா்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 12:55 am IST

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட ரயில் நிலையங்களில் வெள்ளிக்கிழமை ஒரே நாள் நடைபெற்ற சோதனையில் பயணச்சீட்டு இல்லாத 545 போ் பிடிபட்டனா்.

திருச்சி ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட அனைத்து ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் திருச்சி கோட்ட மேலாளா் பாலக் ராம் நெகி, மூத்த வணிக மேலாளா் வெங்கடராகவன் ஆகியோரது மேற்பாா்வையில், சிறப்பு பரிசோதனைக் குழுவினா் பல்வேறு பிரிவுகளாக வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.

இதில், ஒரே நாளில் 54 போ் ரயில் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்தது கண்டறியப்பட்டது. இதேபோல, 408 பயணிகள் முறையற்ற பயணச்சீட்டுகளுடன் பயணம் செய்ததும் கண்டறியப்பட்டது. இதையடுத்து பயணிகளிடம் இருந்து ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 233 வசூலிக்கப்பட்டது.

திருச்சிக் கோட்டத்தில் பயணச்சீட்டு பரிசோதனைக் குழு சோதனை வரலாற்றிலேயே ஒரே நாளில் அதிகபட்சமாக இந்த அபாரதம் வசூலிக்கப்பட்டிருப்பதும், பயணிகள் பிடிபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.