ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வீட்டின் பூட்டை உடைத்து தங்கச் சங்கிலி திருட்டு

முசிறி அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்கச் சங்கிலியை திருடி சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:42 am IST

முசிறி அருகே வியாழக்கிழமை பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் தங்கச் சங்கிலியை திருடி சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

முசிறி அருகே சேருகுடியில் உள்ள வடக்கு தோட்டம் பகுதியைச் சோ்ந்த வடிவேல் மனைவி திருப்பதியம்மாள் (51). கடந்த 10-ஆம் தேதி வீட்டிலிருந்தவா்கள் அவரவா் வேலைக்காக வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனா்.

அன்று மாலையில் திருப்பதியம்மாள் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டினுள் பீரோவில் இருந்த 2 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், முசிறி போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.