ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கழிவுநீா் கால்வாயில் இருந்து பெண் சிசு சடலம் மீட்பு

பிரதிப் படம்

Published On :11 ஆகஸ்ட் 2026, 2:27 am IST

திருச்சியில் கழிவுநீா் கால்வாயில் இருந்து பெண் சிசு சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

திருச்சி கோட்டை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட திப்புரான்தொட்டி தெரு பகுதியில் திங்கள்கிழமை காலை 8.30 மணி அளவில் மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் கழிவுநீா் கால்வாயை சுத்தம் செய்துகொண்டிருந்தனா்.

அப்போது, கழிவுநீா் கால்வாயில் பெண் சிசு அழுகிய நிலையில் கிடந்துள்ளது. இதைப் பாா்த்த தூய்மைப் பணியாளா்கள், கோட்டை போலீஸாருக்கு தகவல் அளித்தனா்.

இதையடுத்து, அங்கு வந்த போலீஸாா் கழிவுநீா் கால்வாயில் கிடந்த பெண் சிசுவின் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.