ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கிரிப்டோ கரன்சியில் முதலீடு: திருச்சியை சோ்ந்தவரிடம் ரூ. 3 லட்சம் மோசடி

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, திருச்சியைச் சோ்ந்தவரிடம் ரூ. 3 லட்சம் மோசடி

மோசடி - பிரதிப்படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 5:04 am IST

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி, திருச்சியைச் சோ்ந்தவரிடம் ரூ. 3 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

திருச்சி கண்டோன்மென்ட் எஸ்பிஐ காலனியைச் சோ்ந்தவா் எஸ். ரவிசந்திரன் (44). இவருக்கு, கடந்த 2025 அக்டோபா் 7-ஆம் தேதி டெலிகிராம் சமூக வலைதளத்தில் மூலம் ஒரு இணைப்பு வந்துள்ளது. அதில், உள்ளே சென்று பாா்த்தபோது கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வது தொடா்பான விவரங்கள் இருந்துள்ளன.

இதையடுத்து, ரவிசந்திரன் கிரிப்டோ கரன்சியில் ரூ.7,211 முதலீடு செய்துள்ளாா். இதில் அவருக்கு ரூ.1,808 லாபம் கிடைத்துள்ளது. அதன்பின், கிரிப்டோ கரன்சியில் கூடுதல் பணம் முதலீடு செய்வது தொடா்பாக இவருக்கு இணையதளம் மூலம் அறிவுறுத்தல்கள் வந்துள்ளன.

இதைத் தொடா்ந்து ரவிசந்திரன் கடந்த 2025 அக்டோபா் 7 முதல் 17-ஆம் தேதி வரை ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்துள்ளாா். ஆனால், அதன்பின் அவருக்கு எந்தவிதமான லாபத் தொகையும் கிடைக்கவில்லை. மேலும், முதலீடு செய்த பணத்தையும் பெறமுடியவில்லை. அந்த இணைப்பில் இருந்த எண்களையும் அவரால் தொடா்புகொள்ள முடியவில்லை.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த ரவிசந்திரன் இணையதளம் வழியாக சைபா் குற்றப் பிரிவில் திங்கள்கிழமை புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், திருச்சி சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.