ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கழிவுநீா் கால்வாயில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு

திருச்சியில் கழிவுநீா் கால்வாயில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்தவா் உயிரிழந்தாா்.

Army soldier died

பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 4:34 am IST

திருச்சியில் கழிவுநீா் கால்வாயில் இருசக்கர வாகனத்துடன் தவறி விழுந்தவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.

திருச்சி உறையூரைச் சோ்ந்தவா் எஸ். ராஜீவ் காந்தி (37). இவா், சனிக்கிழமை நள்ளிரவு திருச்சி அண்ணாமலை நகா் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, சாலையின் வளைவில் திரும்பியதுபோது இருசக்கர வாகனத்துடன் கழிவுநீா் கால்வாயில் விழுந்துள்ளாா்.

அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்து திருச்சி வடக்குப் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.