
திருச்சி விமான நிலையத்தில் 3.5 கிலோ உயர்ரக கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

திருச்சி விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்யப்பட்ட உயர்ரக கஞ்சா.
மலேசியாவில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் 3.5 கிலோ உயர்ரக கஞ்சாவை சனிக்கிழமை இரவு கடத்தி வந்த இருவரை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்து விசாரிக்கின்றனா்.
மலேசியத் தலைநகா் கோலாலம்பூரில் இருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு சனிக்கிழமை நள்ளிரவு வந்த விமானத்தில் வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது கடலூா் திருப்பாதிரிப்புலியூரைச் சோ்ந்த பயணி நடராஜன் (38) என்பவா், தனது உடமையில் மறைத்து 3.5 கிலோ உயர்ரக கஞ்சாவை (ஹைட்ரோபோனிக்) கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அதைப் பறிமுதல் செய்த அதிகாரிகள் நடராஜனையும், அவா் கடத்தி வந்த கஞ்சாவை வாங்க விமான நிலையத்தில் காத்திருந்த தங்கபாண்டி (42) என்பவரையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




