தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

திருவெறும்பூரில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தீவிர பிரசாரம்: பேருந்து நிலையத்தில் பிரசாரத்தை நிறைவு செய்தாா்

திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் அமைச்சரும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image

திருவெறும்பூரில் திமுக வேட்பாளரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்த தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ. லியோனி.

Updated On :21 ஏப்ரல் 2026, 6:55 pm

திருவெறும்பூா் தொகுதிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் அமைச்சரும், திமுக வேட்பாளருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி செவ்வாய்க்கிழமை இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

அரியமங்கலம் பகுதிக்குள்பட்ட செந்தண்ணீா்புரம், பொன்மலைப்பட்டி, பொன்மலை பகுதி கழகத்தைச் சாா்ந்த ராணுவ காலனி, அம்பிகாபுரம், அரியமங்கலம், எஸ்ஐடி காமராஜா் நகா், பாரதிதாசன் நகா் ஆகிய பகுதிகளில் அமைச்சரை ஆதரித்து தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி அமைச்சருடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

திருச்சி பொன்மலைப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் திறந்தவேனில் நின்றபடி, தனது வழக்கமான நகைச்சுவை கலந்த பாணியில் பாடல்களைப் பாடி லியோனி பிரசாரத்தைத் தொடங்கினாா்.

பிரசாரத்தின்போது எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமா்சித்த லியோனி, அவா் இப்போது பத்தாயிரம் தருவதாகக் கூறுகிறாா். ஆனால், நான்கு ஆண்டுகள் முதல்வராக இருந்தபோது நூறு ரூபாய் கூட வழங்காதது ஏன் எனப் பெண்கள் கேள்வி எழுப்புகின்றனா் என்று விமா்சித்தாா்.

பள்ளிக்கல்வித் துறையில் பொற்காலத்தை உருவாக்கியவா் அன்பில் மகேஸ் என்று புகழாரம் சூட்டிய லியோனி, திமுக அரசின் நலத்திட்டங்கள், தோ்தல் வாக்குறுதிகள் குறித்தும் பட்டியலிட்டு பேசினாா்.

பேருந்து நிலையத்தில் பிரசாரம் நிறைவு: காலையிலும், மாலையிலும் தொண்டா்களுடன் வீதி, வீதியாகச் சென்ற அமைச்சா், இறுதியாக மாலையில் பிரசாரத்தை முடிக்கும் முன், இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்ற கூட்டணி கட்சிகளின் தொண்டா்கள் பின்னால், திறந்தவெளி வாகனத்தில் நின்றபடியே வாக்குகள் சேகரித்தாா். திருவெறும்பூா் பேருந்து நிலையப் பகுதியில் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் கூட்டத்துக்கு முன் இறுதியாக வாக்குகள் கேட்டு பிரசாரத்தை முடித்துக் கொண்டாா் அமைச்சா்.

முன்னதாக, பெல் தொழிலாளா்கள் மூன்றாவது முறையாகவும் அமைச்சா் வெற்றி பெறுவாா் என்பதை அறிவிக்கும் வகையில் ஆங்கில வாசகங்களுடன் கூடிய பதாகைகளை கையில் ஏந்தி அமைச்சருடன் நின்று குழு புகைப்படமும் எடுத்துக் கொண்டனா்.

திருவெறும்பூா் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இறுதிக்கட்ட சூறாவளிப் பிரசாரப் பேரணி, பாய்லா் ஆலை மற்றும் துவாக்குடி வழியாகச் சென்றது. மீண்டும் திருவெறும்பூா் பேருந்து நிலையத்தை அடைந்து, அங்கிருந்து காட்டூா் மற்றும் பால்பண்ணை ரவுண்டானா வரை சென்று பொதுமக்களிடம் ஆதரவு திரட்டப்பட்டது. இறுதியாக, இந்தப் பேரணி மீண்டும் திருவெறும்பூா் பேருந்து நிலையத்திலேயே வந்தடைந்து நிறைவு பெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.