பராபவ தமிழ் ஆண்டு பிறப்பையொட்டி திருச்சி மாநகா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மாநகரிலுள்ள ஐயப்பன் கோயில், மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில், உச்சிப்பிள்ளையாா் கோயில், திருவானைக்கா அகிலாண்டேசுவரி திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், கல்லுக்குழி ஆஞ்சனேயா் கோயில், உறையூா் வெக்காளியம்மன் திருக்கோயில், பஞ்சவா்ணேசுவர சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களிலும், சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்,திருப்பட்டூா் பிரம்மபுரீசுவரா் திருக்கோயில், திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரா் திருக்கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கூட்டம் அதிகமாக காணப்பட்ட கோயில்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.
திருச்சி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடங்கள், பூங்காக்களிலும் மக்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது. தமிழ்ப் புத்தாண்டு விடுமுறை என்பதால், திரையரங்குகளிலும் கூட்டம் நிரம்பியிருந்தது.
தொடர்புடையது

தமிழ் புத்தாண்டு: திருவண்ணாமலை மாவட்ட கோயில்களில் சிறப்பு வழிபாடு

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு: கோயில்களில் சிறப்பு வழிபாடு

தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு: கோயில்களில் சிறப்பு வழிபாடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


