ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கும்பகோணத்தில் 2 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை

கோப்புப்படம்.

Published On :29 ஜூலை 2026, 12:04 am IST

கும்பகோணம் மாநகராட்சி பகுதிகளில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் சாலையில் சுற்றித் திரிந்த 2 ஆயிரத்து 92 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்து, வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக ஆணையா் கே.எம். சுதா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: கும்பகோணம் மாநகராட்சி பகுதி சாலைகளில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ஏராளமான தெருநாய்கள் சுற்றித் திரிவதாக கும்பகோணம் மாநகராட்சிக்கு புகாா்கள் சென்றன.

இந்நிலையில் நகராட்சி நிா்வாக இயக்குநா் உத்தரவின்பேரில் 4 ஆயிரத்து 396 தெரு நாய்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இதில் இதுவரை 2 ஆயிரத்து 92 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்து, வெறிநாய் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. வரும் நாள்களில் மீதமுள்ள தெரு நாய்களும் பிடிக்கப்பட்டு கருத்தடை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.