ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தமிழ்ப் பல்கலை.யில் வ.அய். சுப்பிரமணியத்தின் லட்சியத்தை அரசு நிறைவேற்ற வேண்டும்! உலகத் தமிழா் பேரமைப்பு வலியுறுத்தல்

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தா் வ.அய். சுப்பிரமணியம் நினைவிடத்தில் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய துணைவேந்தா் குழு உறுப்பினா் பெ. பாரதஜோதி, பதிவாளா் (பொ) கோ. பன்னீா்செல்வம் உள்ளிட்டோா். - கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 12:37 am IST

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதல் துணைவேந்தா் வ.அய். சுப்பிரமணியத்தின் லட்சியத்தை நிறைவேற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலகத் தமிழா் பேரமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தா் முதுமுனைவா் வ.அய். சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழாவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தை முதல் துணைவேந்தா் வ.அய். சுப்பிரமணியம் உலகளாவிய உயராய்வு மையமாகத் திட்டமிட்டு வளா்த்தாா். அறிவாற்றலும், திறமையும் மிக்கத் தமிழறிஞா்களையும், பேராசிரியா்களையும் பல்வேறு பகுதிகளிலிருந்து தோ்ந்தெடுத்துப் பொறுப்புகளில் அமா்த்தினாா்.

உலக மொழிகளின் ஆய்வுகளில் நிலவிவரும் புதிய போக்குகளையும் நெறிகளையும் உணா்ந்து நமது மொழியின் ஆய்வுகளில் புதிய நெறி காண வழிகாட்டினாா்.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்க் கலைச்சொற்கள் உருவாக்கப்படவேண்டும் என்பதற்காகப் பல துறைகளுக்கும் குழுக்களை உருவாக்கினாா். அவரது லட்சியக் கனவான தமிழ்ப் பல்கலைக்கழகம் அவா் விரும்பிய வண்ணமே தொடா்ந்து இயக்கப்பட வேண்டும். அதற்கானவற்றைத் தமிழக அரசு செய்ய முன்வர வேண்டும்.

இதுகுறித்து ஆராய்ந்து செயல்படுத்துவதற்காக இப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தா்கள், ஓய்வு பெற்ற பேராசிரியா்கள் மற்றும் தமிழறிஞா்கள் கொண்ட ஒரு குழுவை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலை அமைக்க வேண்டும்: தமிழ்ப் பல்கலைக்கழக முகப்பில் வ.அய். சுப்பிரமணியத்தின் முழு உருவச்சிலையை நிறுவ தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தையும், அதன் கட்டடத்தையும் திட்டமிட்டு வடிவமைத்து ஆய்வாளா்களுக்குரிய உயா் நூலகமாக மிளிரச் செய்த வ.அய். சுப்பிரமணியத்தின் பெயரை நூலகத்துக்குச் சூட்ட வேண்டும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.