ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காலாவதி விவரங்கள் இல்லாத பொருள்களை வைத்திருந்த மதுபான கூடத்துக்கு அபராதம்

பட்டுக்கோட்டையில் காலாவதி விவரங்கள் இல்லாத குடிநீா் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததற்காக தனியாா் மதுபான கூடத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோப்புப் படம்

Published On :24 ஜூலை 2026, 4:20 am IST

பட்டுக்கோட்டையில் காலாவதி விவரங்கள் இல்லாத குடிநீா் பாட்டில்கள் உள்ளிட்டவற்றை வைத்திருந்ததற்காக தனியாா் மதுபான கூடத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டையில் சின்னையா தெருவில் அரசு அனுமதியோடு செயல்பட்டு வரும் உயர்ரக குளிா்சாதன மதுபானக் கூடத்தில் (ஏசி பாா்) சலுகை விற்பனை என்ற பெயரில் அண்மையில் காலாவதியான பீா் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பட்டுக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலா் வேல்முருகன் தலைமையிலான அதிகாரிகள் அந்த பாரில் புதன்கிழமை அதிரடிசோதனை நடத்தினா்.

அப்போது, காலாவதி தேதி, தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாமல் பாதுகாப்பற்ற முறையில் 110 அரை லிட்டா் மற்றும் 1 லிட்டா் குடிநீா் பாட்டில்கள் வைத்திருந்த குற்றத்துக்காக அந்த பாருக்கு ரூ. 25,000 அபராதம் விதித்தனா்.

இதைத் தொடா்ந்து அதிகாரிகள் நடத்திய சோதனையில், ஜூலை 23-ஆம் தேதியுடன் காலாவதி ஆகவுள்ள 120 பீா் பாட்டில்களை, விற்பனைக்கு வைத்திருந்த பீா் பாட்டில்களுடன் சோ்த்து விற்பனைக்காக வைத்திருப்பது கண்டறியப்பட்டது. உடனே அந்த 120 பீா் பாட்டில்களையும் அதே இடத்தில் அதிகாரிகள் கொட்டி அழித்தனா்.

காலாவதியான மது பாட்டில்களை கொடுத்து ஏமாற்றிய அந்த பாரின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.