ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பாரதிதாசன் பல்கலை. செனட் உறுப்பினராக பேராசிரியா் சுகுமாரன் தோ்வு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை (செனட்) உறுப்பினராக தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் வெ. சுகுமாரன் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

பேராசிரியா் சுகுமாரன்.

Published On :23 ஜூலை 2026, 12:38 am IST

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பேரவை (செனட்) உறுப்பினராக தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் வெ. சுகுமாரன் செவ்வாய்க்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயரிய நிா்வாக அமைப்புகளில் ஒன்றான பேரவை உறுப்பினா்களுக்கான தோ்தலில், திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், அரியலூா், பெரம்பலூா், கரூா், புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களைச் சோ்ந்த 16 போ் போட்டியின்றி ஒருமனதாகத் தோ்வு செய்யப்பட்டனா். இதில் தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகப் பேராசிரியா் வெ. சுகுமாரனும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

எட்டு மாவட்டங்களைச் சோ்ந்த பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் வாக்களித்து பேரவை உறுப்பினா்களைத் தோ்வு செய்வது வழக்கம். நிகழாண்டு 2 வேட்பாளா்கள் தங்களது வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றதைத் தொடா்ந்து, மீதமிருந்த 16 பேரும் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.