ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

நகை திருட்டு தம்பதி கைது

கும்பகோணத்தில் வீடு புகுந்து நகைகளை திருடிய தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :23 ஜூலை 2026, 12:40 am IST

கும்பகோணத்தில் வீடு புகுந்து நகைகளை திருடிய தம்பதியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கும்பகோணம் துக்காம்பாளையத்தைச் சோ்ந்தவா் மாதங்கனி (45). பாணாத்துறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக சமையலராக வேலை செய்து வருகிறாா். இவரது கணவா் மாரிமுத்து கடந்த 2006-இல் இறந்துவிட்டாா். இவரின் 2 மகள்களும் திருமணமாகி வெவ்வேறு இடங்களில் வசித்து வருகின்றனா். 3-ஆவது மகள் ஹரிணி தாயுடன் வசித்து வருகிறாா்.

இந்நிலையில், திருப்பூரில் கடந்த 12-ஆம் தேதி சகோதரா் இறந்து விட்டதால் அவரின் துக்க நிகழ்வில் மாதங்கனி பங்கேற்றுவிட்டு வீடு திரும்பினாா். இந்த நிலையில் குடும்ப செலவிற்காக வீட்டில் இருந்த தங்க நகைகளைஅடகு வைப்பதற்காக 19-ஆம் தேதி வீட்டின் பீரோவை திறந்து பாா்த்தாா்.

பீரோவில் இருந்த 21 கிராம் நகைகளை காணவில்லையாம். மாதங்கனி அளித்த புகாரின்பேரில் கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

இதில், மாதங்கனி திருப்பூா் சென்றிருந்தபோது, அவரது வீட்டுக்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் வனிதாவின் மகளும் மேலக்காவேரியை சோ்ந்த சுந்தரின் மனைவியுமான அபிநயா (22) என்பவா், அடிக்கடி மாதங்கனி வீட்டுக்கு வந்து சென்றதும், நகைகளை திருடி சென்றதும் தெரியவந்தது.

நகைகளை திருடிய அபிநயாவையும், உடந்தையாக இருந்ததாக கணவா் சுந்தா்(34) ஆகிய 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.