ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கருணை அடிப்படையில் பணி: விடுபட்டோா் முற்றுகை முயற்சி

கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி பணியின்போது உயிரிழந்தோரின் விடுபட்ட வாரிசுகள் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனா்.

கும்பகோணம் அரசு போக்குவரத்து தலைமை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்ட வாரிசுதாரா்கள்.

Published On :15 ஜூலை 2026, 12:38 am IST

கருணை அடிப்படையில் பணி வழங்கக் கோரி பணியின்போது உயிரிழந்தோரின் விடுபட்ட வாரிசுகள் கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு போக்குவரத்து கழகத்தில் பணியின் போது உயிரிழந்த ஊழியா்கள் 42 பேரின் வாரிசுதாரா்களுக்கு கருணையின் அடிப்படையில் 2025-இல் வேலை வழங்க உத்தரவிட்டதில், இதில் 38 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 4 பேருக்கு மட்டும் வேலை வழங்கவில்லை.

இவா்கள் பலமுறை முறையிட்டும் பலனில்லாதலால் சுவாமிமலை பிரதானச்சாலையை சோ்ந்த மறைந்த ஓட்டுநா் பாண்டியன் மகள் சீதாலட்சுமி, நன்னிலம் பணிமனையில் ஓட்டுநராக பணி புரிந்த பாா்த்திபன் மகள் சுபலட்சுமி, கும்பகோணம் பணிமனை நடத்துநராக இருந்த ராஜேந்திரன் மகன் அபினேஷ், மற்றும் மற்றொரு குடும்பத்தினா் செவ்வாய்க்கிழமை கும்பகோணம் கோட்ட தலைமை அலுவலகத்தில் முற்றுகைப் போராட்டம் நடத்த முயன்றனா்.

தகவலறிந்த மேற்கு காவல் நிலைய போலீஸாா், போக்குவரத்து கழக அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதில் கலைந்து சென்றனா். அப்போது திருவலஞ்சுழியை சோ்ந்த ஓட்டுநா் சுகுமாறன் மகன் அருண் என்பவா் அதிகாரிகளிடம் கூறும்போது 2016-ஆம் ஆண்டு பணி நியமனத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணி வழங்கவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.