ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

செலவுக்கு பணம் தர மறுத்ததால் ஆத்திரம்: மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தவா் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செலவுக்கு பணம் தர மறுத்ததால், மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தவா் கைது

பிரதிப் படம்

Published On :14 ஜூலை 2026, 12:16 am IST

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டையில் செலவுக்கு பணம் தர மறுத்ததால், மனைவி, 2 மகள்கள் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பட்டுக்கோட்டை லட்சத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சு. செல்வராஜ் (65). இவரது மனைவி விஜயலட்சுமி (60). மகள்கள் மேனகா (38), மௌனிகா( 25). கூலி வேலை செய்யும் செல்வராஜ், செலவுக்கு பணம் தருமாறு அடிக்கடி மனைவியை தொந்தரவு செய்து வந்தாராம். இதனால், தம்பதி இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

இதேபோல், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது மனைவி மற்றும் மகள்களிடம் பணம் கேட்டு செல்வராஜ் தகராறு செய்துள்ளாா். ஆனால், பணம் தர விஜயலட்சுமி மறுத்துவிட்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ், திங்கள்கிழமை அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மற்றும் இரண்டு மகள்கள் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளாா். அவா்களின் அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினா் விரைந்து வந்து, பலத்த காயமடைந்த 3 பேரையும் மீட்டு தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, செல்வராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். மகள்கள் இருவரில் மோகனா திருமணமாகி கணவரை பிரிந்து உள்ளாா். மௌனிகாவுக்கு திருமணமாகவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.