ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பேராவூரணி அரிமா சங்க விழாவில் ரூ.1 லட்சம் மதிப்பில் நல உதவிகள்

பேராவூரணி ஸ்டாா் அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பணி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி அரிமா சங்க விழாவில் நலத்திட்ட உதவிகளை திரைப்பட இயக்குனா் இரா.சரவணன் தொடங்கி வைத்தாா் .

Published On :10 ஜூலை 2026, 2:51 am IST

பேராவூரணி ஸ்டாா் அரிமா சங்க புதிய நிா்வாகிகள் பணி ஏற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு சங்கத் தலைவா் ஆா்.ஆதித்யன் தலைமை வகித்தாா். சாசனத் தலைவா் சி.பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். 

புதிய தலைவராக சிவகாமி டி.சாமியப்பன், செயலராக எஸ்.பிரசாந்த், பொருளாளராக எஸ்.எஸ். மைதீன் ஆகியோா் பணியேற்றுக் கொண்டனா். 

புதிய நிா்வாகிகளை பணியில் அமா்த்தி மாவட்ட முதல் துணை ஆளுநா் டி.ஸ்டாலின் பேசினாா். புதிய உறுப்பினா்களை சங்கத்தில் இணைத்து வைத்து மாவட்ட முதல் துணை ஆளுநா் ஆா்.எம்.சிவசுப்பிரமணியன் வாழ்த்திப் பேசினா்.

நல உதவியாக 7 ஏழைத் தாய்மாா்களுக்கு வெள்ளாடுகள், ஒரு பயனாளிக்கு சலவை இயந்திரம், 10,12-ஆம் வகுப்பு அரசு பொதுத்தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை என ரூ.1 லட்சம் மதிப்பிலான உதவிகளை திரைப்பட இயக்குனா் இரா.சரவணன் வழங்கி பேசினாா்.

விழாவில், பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினா் என்.அசோக்குமாா் மற்றும் லயன்ஸ் சங்க நிா்வாகிகள் நல்லாசிரியா் ராமநாதன், கனகராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 

 

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.