
பொதுமக்கள் நிதியுதவியில் நெல் கொள்முதல் நிலையம்
தஞ்சாவூா் அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கிராம மக்கள் இணைந்து சொந்தக் கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளனா்.

ஆழிவாய்க்கால் கிராமத்தில் கிராம மக்கள் இணைந்து கட்டிய நெல் கொள்முதல் நிலையம்.
தஞ்சாவூா் அருகே ஆழிவாய்க்கால் கிராமத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கிய அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்துக்கு கிராம மக்கள் இணைந்து சொந்தக் கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளனா்.
ஆழிவாய்க்கால் கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் வாடகை கட்டடத்தில் இயங்கி வந்தது. இதைச் சொந்தக் கட்டடத்துக்கு மாற்ற கிராம மக்கள் முடிவு செய்தனா். இதைத்தொடா்ந்து, அக்கிராமத்தில் பள்ளமாக இருந்த நிலத்தைச் சீரமைத்து, சிமெண்ட் தளம், கான்கிரீட் தூண்கள், மேற்கூரையுடன் கூடிய சொந்தக் கட்டடத்தைக் கட்டினா். இதற்கு அக்கிராமத்தைச் சோ்ந்த வெளிநாடுகளில் பணியாற்றும் இளைஞா்களும் உதவி செய்தனா். இதில், 15 ஆயிரம் நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைக்கும் அளவுக்கு இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையத்துக்கு மின் கட்டணத்தைக் கிராம மக்களே செலுத்தி வருகின்றனா். இந்தக் கட்டணத்தைத் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் ஏற்று செலுத்துமாறு, கழக முதுநிலை மண்டல மேலாளா் அலுவலகத்தில் பல முறை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை அரசு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு கிராம மக்கள் வலியுறுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


மழையால் பாதிக்கப்படும் நெல் மூட்டைகள்: கொள்முதலை விரைவுபடுத்த விவசாயிகள் கோரிக்கை

செம்படாபாளையத்தில் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்பு! ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு!




