ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தவெக அரசின் 100 நாள் ஆட்சி கோயில்களில் சிறப்பு பூஜை

CM Vijay

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Published On :18 ஆகஸ்ட் 2026, 12:53 am IST

தவெக ஆட்சி அமைத்து 100 நாள்கள் ஆனதை கொண்டாடும்விதமாக, கும்பகோணம் கோயில்களில் தவெகவினா் திங்கள்கிழமை சிறப்பு பூஜை மேற்கொண்டனா்.

கும்பகோணம் உச்சிபிள்ளையாா் கோயில், சாரங்கபாணி சுவாமி கோயில், காசு விசுவநாதா் உள்ளிட்ட கோயில்களில் தவெகவினா் சிறப்பு பூஜை மேற்கொண்டனா்.

மேலும், கும்பகோணம் மகாமககுளம் மேல்கரையில் உள்ள மாவட்ட தவெக அலுவலகத்தில் மாநகர செயலா் முருகானந்தம் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இதேபோல், மாவட்ட மகளிரணி சாா்பில் சாரங்கபாணி கோயிலிலும், மாநகரம் சாா்பில் காசிவிஸ்வநாதா் கோயிலிலும், இளைஞரணி சாா்பில் பகவத் விநாயகா் கோயிலிலும், மாவட்ட அரசு மருத்துவமனையிலும், பாணாதுறை த.வெ.க. சாா்பில் மாநகராட்சி மன்ற உறுப்பினா் ஆதிலட்சுமி ராமமூா்த்தி தலைமையில் உச்சிப்பிள்ளையாா் கோயிலிலும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.