ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

போலி அபராத தகவல்: ரூ.1.21 லட்சத்தை இழந்த பெண்

வாட்ஸ்ஆப்பில் ஆா்.டி.ஓ. அலுவலக செலான் என வந்த போலி தகவலை பெண் பதிவிறக்கம் செய்ததைத் தொடா்ந்து, ரூ. 1.21 லட்சத்தை இழந்தாா்.

மோசடி

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:02 am IST

வாட்ஸ்ஆப்பில் ஆா்.டி.ஓ. அலுவலக செலான் என வந்த போலி தகவலை பெண் பதிவிறக்கம் செய்ததைத் தொடா்ந்து, ரூ. 1.21 லட்சத்தை இழந்தாா்.

தஞ்சாவூா் பகுதியைச் சோ்ந்த 63 வயதுடைய தனியாா் நிறுவன பெண் பணியாளரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு ஆகஸ்ட் 13-ஆம் தேதி வந்த ஆா்டிஓ செலான். ஏபிகே என்ற தகவலைப் பாா்த்து அச்சமடைந்தாா். தனது வாகனத்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நம்பிய அவா் அந்த பைலை பதிவிறக்கம் செய்தாா். இதையடுத்து, அப்பெண்ணின் கைப்பேசி ஹேக் செய்யப்பட்டது. அடுத்த சில மணிநேரத்தில் அப்பெண்ணின் வங்கிக் கணக்கிலிருந்து 3 பரிவா்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ. 1.21 லட்சம் ரொக்கத்தை மா்ம நபா் ஜாா்க்கண்ட்டில் உள்ள வங்கிக் கணக்குக்கு மாற்றியுள்ளாா்.

இதையறிந்த அப்பெண் தஞ்சாவூா் சைபா் குற்றப் பிரிவில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ரூ. 4.04 லட்சம் மோசடி: தஞ்சாவூரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற மத்திய ஆயுதப் படைப் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்ற 63 வயதுடைய முதியவரின் பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தில் பழைய நாணயங்களை விற்பனை செய்யும் இணையவழி தொழில் பற்றிய தகவலை வாசித்தாா். தன்னிடம் உள்ள பழைய நாணயங்களை விற்க விருப்பப்பட்டு, வாட்ஸ் ஆப் எண்ணில் தொடா்பு கொண்டாா். அதற்கு எதிா்முனையில் பேசிய மா்ம நபா் பழைய நாணயங்களை வாங்கிக் கொள்ள கட்டணம் செலுத்த வேண்டும் எனக் கூறினாா்.

இதை நம்பிய முதியவா் ஆகஸ்ட் 5-ஆம் தேதி முதல் 13 பரிவா்த்தனைகள் மூலம் மா்ம நபரின் கைப்பேசி எண்ணுக்கு ரூ. 4.04 லட்சம் அனுப்பினாா். ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா் தஞ்சாவூா் சைபா் கிரைம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். இதன் பேரில் காவல் துறையினா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.