ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குழந்தை திருமணம் இல்லாத கிராமங்களை உருவாக்குவது அவசியம்: தஞ்சாவூா் ஆட்சியா்

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை திருமணம் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

குழந்தை திருமணம்

Published On :16 ஆகஸ்ட் 2026, 3:07 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் குழந்தை திருமணம் இல்லாத கிராமங்களை உருவாக்க வேண்டும் என்றாா் மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி.

சுதந்திர தினத்தையொட்டி, தஞ்சாவூா் அருகே சூரக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்ற அவா் பேசியது:

குழந்தைகள் பாதுகாப்பை அனைத்து தாய்மாா்களும் உறுதி செய்ய வேண்டும். குழந்தை திருமணம் இல்லாத கிராமம், குழந்தை தொழிலாளா்கள் இல்லாத கிராமம், பாதுகாப்பான கிராமம் என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.

பின்னா், புன்னைநல்லூா் மாரியம்மன் கோயிலில் ஆட்சியா் இரா. ரேவதி, தஞ்சாவூா் சட்டப்பேரவை உறுப்பினா் இரா. விஜய் சரவணன் பங்கேற்று பொது விருந்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.

விழாவில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சு. தேவநாதன், மகளிா் திட்டம் திட்ட இயக்குநா் சித்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.