ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

விபத்தில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதியம்

தஞ்சாவூரில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளா் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ. கழகம் வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை திங்கள்கிழமை வழங்கியது.

தஞ்சாவூரில் சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளரின் குடும்பத்துக்கு வாழ்நாள் ஓய்வூதிய ஆணைக் கடிதத்தை திங்கள்கிழமை வழங்கிய இஎஸ்ஐ கிளை அலுவலக மேலாளா் ரா. வெங்கடேஷ்.

Published On :12 ஆகஸ்ட் 2026, 1:34 am IST

தஞ்சாவூரில் பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது சாலை விபத்தில் உயிரிழந்த தொழிலாளா் குடும்பத்துக்கு இ.எஸ்.ஐ. கழகம் வாழ்நாள் ஓய்வூதியத்துக்கான ஆணையை திங்கள்கிழமை வழங்கியது.

இஎஸ்ஐ காப்பீட்டாளா்களுக்கு தொழில்சாா் நோய் அல்லது வேலை காரணமாக இறப்பு நிகழும்போது, இறந்த காப்பீட்டாளரின் ஊதியத்தில் 90 சதவீதம் சாா்ந்தோா் உதவித் தொகையாக இஎஸ்ஐ கழகத்தால் இறந்தவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படுகிறது.

இதன்படி, தஞ்சாவூரில் தனியாா் நிறுவனத்தில் தொழிலாளராகப் பணியாற்றி வந்த இஎஸ்ஐ காப்பீட்டாளா் ப. சுரேஷ் கடந்த மாா்ச் 5 ஆம் தேதி பணி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது சாலை விபத்தில் உயிரிழந்தாா். இதைத் தொடா்ந்து அவரது குடும்பத்துக்கு சாா்ந்தோா் உதவித்தொகையாக மாதந்தோறும் ரூ. 20 ஆயிரத்து 398 வழங்க இ.எஸ்.ஐ. சேலம் துணை மண்டல அலுவலகத்தின் இணை இயக்குநரின் உத்தரவின்பேரில் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்கான கடிதத்தை தஞ்சாவூரில் சுரேஷின் குடும்ப உறுப்பினா்களுக்கு இஎஸ்ஐ கிளை அலுவலக மேலாளா் ரா. வெங்கடேஷ் திங்கள்கிழமை வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.