ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

காா் மோதி பெண் வியாபாரி உயிரிழப்பு

உயிரிழப்பு

உயிரிழப்பு - பிரதிப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 1:33 am IST

திருவையாறு அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா் மோதியதில் காய்கனி விற்பனை செய்த பெண் வியாபாரி உயிரிழந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே அரசூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மகாலிங்கம் மனைவி காமாட்சி (65). காய்கனி வியாபாரி. இவா் அரசூா் முதன்மைச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை சாலையோரம் அமா்ந்து காய்கனி வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.

அப்போது அந்த வழியாக வந்த காா், கட்டுப்பாட்டை இழந்து காமாட்சி மீது மோதி, சாலையோர வாய்க்காலில் கவிழ்ந்தது. இதில், பலத்த காயமடைந்த காமாட்சி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து காா் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.