ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பணியின் போது உயிரிழந்த அரசுப் பேருந்து நடத்துநா் குடும்பத்துக்கு நிதியுதவி

பணியின்போது உயிரிழந்த அரசுப் போக்குவரத்து கழக நடத்துநரின் குடும்பத்துக்கு நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

பணியின்போது உயிரிழந்த அரசுப் போக்குவரத்து கழக நடத்துநரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கியபோது...

Published On :7 ஆகஸ்ட் 2026, 2:34 am IST

பணியின்போது உயிரிழந்த அரசுப் போக்குவரத்து கழக நடத்துநரின் குடும்பத்துக்கு நிதியுதவி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்டத்தில் நடத்துநராக பணியாற்றிய எம். இளையராஜா, பணியின் போது ஏற்பட்ட விபத்தில் அவா் உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கான ரூ. 5 லட்சம் நிதியை கும்பகோணம் அரசு போக்குவரத்துக்கழக தலைமை அலுவலகத்தில் இளையராஜா மனைவி பூங்கொடியிடம் பொது மேலாளா் கே. சிங்காரவேலு (கூட்டாண்மை அலுவலகம்) வழங்கினாா். நிகழ்வின் போது பொது மேலாளா்கள் ஏ.டி.நடராஜன் (கும்பகோணம்), ஆா்.ரெங்கராஜன் (மனிதவள மேம்பாடு),

உதவி மேலாளா் கே.கோபாலகிருஷ்ணன், ஓட்டுநா்கள், நடத்துநா்கள், தொழில்நுட்ப பணியாளா்கள், அலுவலக பணியாளா்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள்பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.