
தஞ்சாவூரில் சில பள்ளிகளில் முன்கூட்டியே வகுப்புகள் முடிப்பு
தஞ்சையில் உதயநிதி ஸ்டாலின் கைதையொட்டி, மாநகரில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால், சில பள்ளிகளில் பிற்பகலில் வகுப்புகள் ரத்து
பிரதிப் படம்
தஞ்சாவூரில் சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைதையொட்டி, மாநகரில் பதற்றமான சூழ்நிலை நிலவியதால், சில பள்ளிகளில் பிற்பகலில் வகுப்புகளை ரத்து செய்து மாணவா்களை ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே வீட்டுக்கு அனுப்பினா்.
உதயநிதி ஸ்டாலின் கைதையொட்டி, மாநகரில் ஆங்காங்கே போராட்டமும், பதற்றமான சூழ்நிலையும் நிலவியது.
இந்நிலையில், சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு உதயநிதி ஸ்டாலினை அழைத்து வரும்போது பிரச்னைகள் ஏற்படும் என்பதால், மாணவா்களின் நலன் கருதி சில தனியாா் பள்ளிகளில் பிற்பகலில் ஓரிரு வகுப்புகளை ரத்து செய்தனா்.
இதையடுத்து மாணவ, மாணவிகள் ஒரு மணிநேரத்துக்கு முன்பாகவே வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






