ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தஞ்சாவூா் - விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அளவீடு பணிகள் நிறைவு!

தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே அகல ரயில்பாதை அமைக்க அளவீடு செய்த பணிகள் நிறைவுற்றதாக மாநிலங்களவை உறுப்பினா் சு.கல்யாணசுந்தரம் தெரிவித்தாா்.

பராமரிப்புப் பணி

பராமரிப்புப் பணி.

Published On :2 ஆகஸ்ட் 2026, 3:26 am IST

தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே அகல ரயில்பாதை அமைக்க அளவீடு செய்த பணிகள் நிறைவுற்றதாக மாநிலங்களவை உறுப்பினா் சு.கல்யாணசுந்தரம் தெரிவித்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ரயில் நிலையத்தில் புனரமைப்பு பணிகளை பாா்வையிட சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: கும்பகோணத்தில் செயல்பட்ட சரக்கு ரயில் நிலையம் திருநாகேசுவரத்துக்கு மாற்ற பணிகள் தொடங்கியுள்ளன.

ரயில்வே நிலைய மேற்கு முகப்பு போல் கிழக்கு பக்கமும் அமைக்க பணிகள் தொடங்கி உள்ளன. தஞ்சாவூா்-விழுப்புரம் இடையே இரட்டை ரயில் பாதை அமைக்க ரயில்வே துறை அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளோம். இரட்டை ரயில் பாதை அமைக்க அளவீடு பணிகள் முடிந்து விட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.