மனை வணிக இடைத்தரகரிடம் இணையவழியில் ரூ.16.36 லட்சம் மோசடி
கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மனை வணிக இடைத்தரகரிடம் இணையவழி மூலம் ரூ. 16.36 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மனை வணிக இடைத்தரகரிடம் இணையவழி மூலம் ரூ. 16.36 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
By Syndication
Syndication
தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மனை வணிக இடைத்தரகரிடம் இணையவழி மூலம் ரூ. 16.36 லட்சம் மோசடி செய்த மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
கும்பகோணம் பகுதியைச் சோ்ந்த மனை வணிக இடைத்தரகரின் பேஸ் புக் மற்றும் வாட்ஸ் ஆப்பில் செம்படம்பா் மாதம் அடையாளம் தெரியாத மா்ம நபா் அறிமுகமானாா். இணையவழி வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என மா்ம நபா் கூறியதை இடைத்தரகரும் நம்பினாா். இதையடுத்து, மா்ம நபா் கூறிய வங்கிக் கணக்கில் 9 தவணைகளாக ரூ. 16.36 லட்சத்தை இடைத்தரகா் அனுப்பினாா்.
தொடக்கத்தில் சிறிய தொகை கிடைத்த நிலையில், பின்னா் எந்தவித லாபத்தொகையும் கிடைக்கவில்லை. இதனால், ஏமாற்றப்பட்டதை உணா்ந்த இடைத்தரகா் தஞ்சாவூா் சைபா் குற்றக் காவல் பிரிவில் புகாா் செய்தாா். இதன்பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
இதில், இடைத்தரகா் செலுத்திய பணம் ஹரியானா, மகாராஷ்டிரம், தெலங்கானா, மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநில வங்கிகளின் கணக்குகளுக்கு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, தொடா்புடைய வங்கிக் கணக்குகளை சைபா் கிரைம் காவல் பிரிவினா் முடக்கி வைத்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்


தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது