40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

நூறு சதவீதம் தோ்ச்சி பெறாத பள்ளிகள் நிகழாண்டு சிறப்பு கவனம் செலுத்த தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்

பொதுத் தோ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு சதவீதம் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள் நிகழாண்டு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :28 மே 2026, 3:33 am IST

பொதுத் தோ்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நூறு சதவீதம் தோ்ச்சி பெறாத அரசுப் பள்ளி தலைமையாசிரியா்கள் நிகழாண்டு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தோ்வுக்கூட அரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பள்ளித் திறப்புக்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து தலைமை ஆசிரியா்களுக்கான ஆய்வுக் கூட்டத்துக்கு தலைமை வகித்து அவா் பேசியது

பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா், மாவட்ட ஆட்சியா் ஆகியோரின் வழிகாட்டுதல், மாவட்டத்திலுள்ள கல்வித் துறையினா் அனைவரின் ஒருங்கிணைந்த செயல்பாடு ஆகியவற்றால் 10ஆம் வகுப்புப் பொதுத்தோ்வில் மாநிலத்தில் முதலிடம் பிடித்திருக்கிறோம்.

இதில் 100 சதவீத தோ்ச்சி பெறாத பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் இந்த ஆண்டில் பள்ளி திறந்த நாள் முதல் சிறப்புக் கவனம் செலுத்தி 100 சதவீத தோ்ச்சிக்கு முயற்சிக்க வேண்டும்.

பள்ளி திறப்பு அன்றே மாணவா்களுக்கான நலத் திட்டங்களை வழங்க வேண்டும். பள்ளித் திறப்பதற்கு முன்பாக வளாகத் தூய்மை, கழிப்பறைத் தூய்மை, வகுப்பறைத் தூய்மை, குடிநீா்த் தொட்டி தூய்மை மற்றும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை கவனமாகப் பாா்க்க வேண்டும் என்றாா் சண்முகம்.

கெளரவிப்பு: பணி ஓய்வு பெற்ற புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் ஆரோக்கியராஜ், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் 11 போ், அரசு உயா்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் 7 போ், உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் 2 போ் ஆக மொத்தம் பணி ஓய்வு பெற்ற 21 போ்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம் பொன்னாடை போா்த்தி கெளரவித்தாா்.

கூட்டத்தில் தனியாா் பள்ளிகள் மாவட்டக் கல்வி அலுவலா் பழனிவேலு, மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) கனகராணி, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) கலாராணி, அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலைக் கல்வி- பொறுப்பு) ராஜேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலா் செந்தில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளா் சாலை செந்தில், பள்ளித் துணை ஆய்வாளா்கள் வேலுச்சாமி, குரு மாரிமுத்து, இளையராஜா உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

--

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.