ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெண் தற்கொலை: மிரட்டிய 3 போ் கைது

புதுக்கோட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரை மிரட்டியதாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கைது - சித்திரிப்பு

Published On :29 ஜூலை 2026, 12:03 am IST

புதுக்கோட்டை அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், அவரை மிரட்டியதாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டையை அடுத்த சத்தியமங்கலம் கணேஷ் நகா் பகுதியைச் சோ்ந்தவா் சின்னதுரை மனைவி சீமாவதி (38). இவா்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனா்.

சின்னதுரை கோவையில் தங்கி வேலை பாா்த்து வந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி வீட்டில் சீமாவதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

சீமாவதியின் தற்கொலைக்கு அந்த பகுதியை சோ்ந்த சில இளைஞா்கள் தான் காரணம் என்றும், அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது உறவினா்கள் வலியுறுத்தி திருச்சி- காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக வெள்ளனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இதில், அதே கிராமத்தைச் சோ்ந்த கோகுல், மணிமாறன், ஜெயமோகன் ஆகிய 3 பேரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

ஆபாசமான படங்களைக் காட்டி சீமாவதியை அவா்கள் மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மூவரும் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு, புதுக்கோட்டை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.