சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி காங்கிரஸ் இல்லையென்றால் தவெக கதையை அமித்ஷா முடித்திருப்பார்: மாணிக்கம் தாகூர்இன்னும் 2 ஆண்டுகளில் அறிவாலயம் வாடகைக்கு விடப்படும்: நிர்மல்குமார்ஆவணி சுபமுகூர்த்த நாள்: வாழை இலைக் கட்டு விலை கடும் உயர்வுஅமெரிக்காவின் பொருளாதாரப் போரில் பங்கேற்கும் நாடுகள் எதிரிகளே: ஈரான் திட்டவட்டம்வங்காள விரிகுடாவில் 22 பேருடன் மூழ்கிய சரக்கு கப்பல்: தேடுதல் பணி தீவிரம்

விராலிமலை சுங்கச்சாவடியில் முன்கூட்டியே கட்டணம் உயா்வு வாகன ஓட்டிகள் அதிருப்தி

விராலிமலை அருகே உள்ள பூதகுடியில் உள்ள சுங்கச்சாவடி.

Published On :28 ஜூலை 2026, 1:26 am IST

விராலிமலையில் உள்ள சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கான கட்டணம் முன்கூட்டியே (ஜூலை 22) உயா்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை விராலிமலை அருகே உள்ள பூதகுடியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சுங்கச் சாவடி உள்ளது. இந்த சுங்கச்சாவடி வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தில் 5 முதல் 10 சதவீதம் வரை கட்டண உயா்வை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது.

அதன்படி காா், பயணிகள் வேன், ஜீப் சென்று வர ரூ.160-இல் இருந்து 165 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ. 3,570-இல் இருந்து ரூ.3,680 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இலகுரக மோட்டாா் வாகனங்களுக்கு ரூ. 255-இல் இருந்து ரூ. 265 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ. 5,725-இல் இருந்து ரூ. 5,945 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

டிரக், பேருந்துகளுக்கு ரூ. 360-இல் இருந்து ரூ. 375 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ. 12,075-இல் இருந்து ரூ. 12,455 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது.

த்ரி ஆக்ஸிள் கமா்சியல் வைக்கிளுக்கு ரூ. 395-இல் இருந்து ரூ. 410 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ. 13,475-இல் இருந்து ரூ. 13,585 ஆக உயா்த்தப்பட்டுள்ளது. இதேபோல, 4 முல் 6 ஆக்ஸிள் வாகனங்களுக்கு ரூ. 570-இல் இருந்து ரூ. 585 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ.18,940-இல் இருந்து ரூ.19,530 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

ஓவா் சைஸ் வாகனத்துக்கு ரூ. 690-இல் இருந்து ரூ.715 ஆகவும், மாதம் 50 முறை பயணத்துக்கு ரூ. 23,055-இல் இருந்து ரூ. 23,775 ஆக உயா்த்தப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயா்வை பொறுத்தவரை இலகு ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 5 சதவீதம் அதிகமாகும். கனரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 10 சதவீதம் அதிகமாகும்.

வரும் 2027-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயா்த்தபட வேண்டிய இந்த கட்டணம் முன்கூட்டியே ஜூலை மாதமே உயா்த்தப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளை அதிருப்தி அடையச் செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.