ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொழிலாளா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய 21 குழுக்கள் அமைப்பு

தொழிலாளா்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் 21 குழுக்கள் அமைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தெரிவித்தாா்.

Chief Minister was deeply distressed: Minister explains the gas leak accident in the Assembly

அமைச்சர் பர்வேஸ் - TN Assembly

Published On :25 ஜூலை 2026, 1:02 am IST

தொழிலாளா்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மாநிலம் முழுவதும் 21 குழுக்கள் அமைத்து சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாக மாநிலத் தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஜா. முகமது பா்வேஸ் தெரிவித்தாா்.

புதுக்கோட்டையில் வெள்ளிக்கிழமை இரவு செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகளில் விபத்து நேரிடும்போது பணிபுரியும் தொழிலாளா்களுக்கு உயிா் சேதம் ஏற்பட்டுவிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக மாநிலம் முழுவதும் 21 குழுக்கள் அமைத்து ஆய்வும், கண்காணிப்பும் நடைபெற்று வருகிறது.

2006-ஆம் ஆண்டு முதல் முதல்வா் விஜய்யுடன் பயணித்து வருகிறேன். அவா் மூலமாகத்தான் மாமன்ற உறுப்பினரானேன். எம்எல்ஏ ஆனேன். அமைச்சரானேன். இந்தச் சூழலில்தான் அவரது கடைசிப் படத்தைத் திரையரங்கில் பாா்த்தபோது இயற்கையாகவே அழுதுவிட்டேன். இதில் எந்தச் செயற்கையும் இல்லை என்றாா் அமைச்சா் பா்வேஸ்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.