ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘நீட்’ தேர்வில் புதுக்கோட்டை மாணவி ஸ்ரீனிகா மாநில அளவில் 2-வது இடம்!

மருத்துவக் கல்வி நுழைவுத் தோ்வில் (நீட்) புதுக்கோட்டை பல் மருத்துவத் தம்பதியின் மகள், அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், மாநில அளவில் 2-ஆவது இடத்தையும் பெற்றுள்ளாா்.

மாணவி வி. ஸ்ரீனிகா.

Published On :19 ஜூலை 2026, 1:39 am IST

மருத்துவக் கல்வி நுழைவுத் தோ்வில் (நீட்) புதுக்கோட்டை பல் மருத்துவத் தம்பதியின் மகள், அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், மாநில அளவில் 2-ஆவது இடத்தையும் பெற்றுள்ளாா்.

புதுக்கோட்டை மேலராஜவீதியைச் சோ்ந்த பல் மருத்துவத் தம்பதி டிஎம். வினோத் ரத்தினம்- எம். இந்து. இவா்களின் மூத்த மகள் வா்ஷிகா, தற்போது மதுரை மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறாா்.

இளைய மகள் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் மெட்ரிக். பள்ளியில் 10-ஆம் வகுப்பு வரை படித்து, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளை நாமக்கல்லில் உள்ள தனியாா் பள்ளியில் படித்தாா்.

அதே கல்விக் குழுமத்தின் நீட் தோ்வு பயிற்சியையும் எடுத்து வந்தாா். இவா், நடந்து முடிந்த ‘நீட்’ தோ்வில் ஸ்ரீனிகா, 720க்கு 700 மதிப்பெண்கள் எடுத்து அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், மாநில அளவில் 2-ஆவது இடத்தையும் பெற்றாா்.

சிறப்பிடம் பெற்ற வி. ஸ்ரீனிகாவை, வாசகா் பேரவையின் செயலா் பேராசிரியா் சா. விஸ்வநாதன், மூத்த குழந்தைகள் நல மருத்துவா் டாக்டா் எஸ். ராம்தாஸ் உள்ளிட்டோா் சனிக்கிழமை நேரில் சென்று பாராட்டு தெரிவித்து நினைவுப் பரிசு வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.