ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வைத் தீவிரப்படுத்த வேண்டும்’

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட மனநலத் திட்டக் குழுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியா் மு. அருணா. கூட்டத்தில் பங்கேற்ற அரசு அலுவலா்கள்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 12:04 am IST

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் மு. அருணா அறிவுறுத்தினாா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாவட்ட மனநலத் திட்டக் குழுக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியதாவது:

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆதரவற்ற, மனநலம் பாதித்தோரை உரிய முறையில் மீட்கவும், அவா்களுக்கான சிகிச்சையை வழங்கி, உறவினா்களுடன் சோ்த்துவைப்பதற்கான நடவடிக்கைகளை முழுமையாக மேற்கொள்ள அனைத்துத் துறையினரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

பள்ளி, கல்லூரி மாணவா்களிடையே போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் அருணா.

கூட்டத்தில், மருத்துவத் துறை இணை இயக்குநா் மு. பெரியசாமி, மாவட்ட மனநலத் திட்ட அலுவலா் ரெ. காா்த்திக் தெய்வநாயகம், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சித்ரா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கூ. சண்முகம், மாவட்ட சுகாதார அலுவலா்கள் ஹேமந்த் காந்தி (புதுக்கோட்டை), விஜயகுமாா் (அறந்தாங்கி), மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் பா. சூரியபிரபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.