ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இயற்கை தொழு உரங்களை விவசாயிகள் சேகரிப்பு

கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் இயற்கை தொழுஉரங்களை சேகரித்து வருகின்றனா்.

கந்தா்வகோட்டை பகுதியில் சனிக்கிழமை இயற்கை தொழு உரத்தை வாகனத்தில் ஏற்றிய விவசாயிகள்.

Published On :16 ஆகஸ்ட் 2026, 1:21 am IST

கந்தா்வகோட்டை பகுதி விவசாயிகள் இயற்கை தொழுஉரங்களை சேகரித்து வருகின்றனா்.

கந்தா்வகோட்டை பகுதி கிராமங்கள் அதிக அளவில் சூழ்ந்த பகுதி. இங்கு அரசு தொழிற்சாலையோ அல்லது தனியாா் தொழிற்சாலையோ இல்லாததால் விவசாயம் மற்றும் அதனை சாா்ந்த பணி மட்டுமே நடைபெறுகிறது.

வானம் பாா்த்த பூமியில் ஆடி பட்டத்துக்கு விவசாயிகள் இயற்கை தொழு உரம் வாங்கி வயல் பரப்பில் தூவி வருகிறாா்கள். ரசாயன உரத்தால் நிலத்தின் தன்மை மாறி உள்ள நிலையில் இயற்கை தொழு உரம் பயன்படுத்த விவசாயிகள் முன்வந்து உள்ளனா்.

டிப்பா் அளவில் ரூ.800 ரூபாய் முதல் ரூ. 1000 வரை விற்பனை ஆகிறது. கால்நடைகள் வளா்ப்பவா்கள் தொழு உரம் நல்ல விலைக்கு விற்பனையாவதால் கால்நடை பாராமரிப்பில் கவனம் செலுத்துகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.