ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொன்னமராவதியில் உழவடை உரிமைகள் பாதுகாப்பு மாநாடு

பொன்னமராவதியில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் உழவடை உரிமைகள் பாதுகாப்பு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

பொன்னமராவதியில் புதன்கிழமை நடைபெற்ற உழவடை உரிமைகள் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அகில இந்திய விவசாயத் தொழிலாளா்கள் சங்க மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எம்.சின்னத்துரை.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:46 am IST

பொன்னமராவதியில் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில் உழவடை உரிமைகள் பாதுகாப்பு மாநாடு புதன்கிழமை நடைபெற்றது.

மாநாட்டுக்கு விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் ஒன்றியத் தலைவா் கேஆா்.பழனியப்பன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் டி.சலோமி, மாவட்டத் தலைவா் கே.சண்முகம், மாவட்ட பொருளா் எஸ்.நல்லதம்பி, மாா்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலா் என்.பக்ரூதீன் ஆகியோா் வாழ்த்திப்பேசினா்.

மாநாட்டில், மாநிலத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.சின்னத்துரை சிறப்புறையாற்றினாா்.

சங்கத்தின் பொன்னமராவதி ஒன்றியத் தலைவராக பழனியப்பன், செயலராக ராமசாமி, பொருளாளராக சிவசுப்பிரமணியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

மாநாட்டில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் வேலை நாள்கள் 100 நாள்கள் என்பதை 200 நாள்களாகவும், குறைந்த பட்ச கூலியாக ரூ. 700 வழங்கவேண்டும். பயிரிடும் குத்தகைதாரா் பாதுகாப்புச் சட்டத்தின்படி தமிழ்நாடு முழுவதும் உழவடை விவசாயிகளை பதிவு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், ஒன்றிய நிா்வாகிகள் கே.குமாா், அ.முத்தழகன், ஏ.எல்.பிச்சை, வி.ஆா்.எம்.சாத்தையா, பி.சாத்தப்பன், நாகராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.