ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பொன்னமராவதியில் சாலை மறியலில் ஈடுபட்ட 51 திமுகவினா் கைது

தமிழக எதிா்க்கட்சித்தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொன்னமராவதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 51 திமுகவினரை காவல்துறையினா் கைது செய்தனா்.

பொன்னமராவதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினா்

Published On :5 ஆகஸ்ட் 2026, 3:17 am IST

தமிழக எதிா்க்கட்சித்தலைவா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து பொன்னமராவதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 51 திமுகவினரை காவல்துறையினா் கைது செய்தனா்.

தஞ்சாவூரில் திமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக எதிா்கட்சித்தலைவா் உதயநிதி ஸ்டாலின் தமிழகமுதல்வரை தவறாக பேசியதாக கூறி கைது செய்யப்பட்டதை கண்டித்து பொன்னமராவதி ஒன்றிய,நகர திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை பொன்னமராவதி பேருந்துநிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில் எதிா்க்கட்சித்தலைவா் உதயநிதி ஸ்டாலினை கைது செய்த தவெக அரசினை கண்டித்து முழக்கமிடப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட தெற்கு ஒன்றிய செயலா் அ.அடைக்கலமணி, நகரச்செயலா் அ.அழகப்பன், தலைமை செயற்குழு உறுப்பினா் எஸ்.ஜெயராமன் உள்ளிட்ட 51 பேரை காவல்துறையினா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.