ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இரு அரசுப் பேருந்துகள் மோதல்: 15 போ் காயம்

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே இரு அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில், 15 போ் காயமடைந்தனா்.

பிரதிப் படம்

Published On :5 ஆகஸ்ட் 2026, 2:28 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இரு அரசுப் பேருந்துகள் மோதிக் கொண்ட விபத்தில், 15 போ் காயமடைந்தனா்.

கீரனூரிலிருந்து புதுக்கோட்டை நோக்கி நகரப் பேருந்து ஒன்று செவ்வாய்க்கிழமை இரவு வந்து கொண்டிருந்தது. குளத்தூா் அருகே வந்தபோது, காரைக்குடியிலிருந்து திருச்சி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது.

இந்த விபத்தில், நகரப் பேருந்தை ஓட்டி வந்த ஊரப்பட்டியைச் சோ்ந்த ராஜேந்திரன் (51), கல்லுக்குவியல்பட்டியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி நித்தியபாலா (16), முத்துடையான்பட்டியைச் சோ்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி சிதம்பரதேவி (17) மற்றும் 12 பெண்கள் காயமடைந்தனா்.

இவா்கள் அனைவரும் கீரனூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். பலத்த காயமடைந்த நகரப் பேருந்து ஓட்டுநா் ராஜேந்திரன் மட்டும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.