
அன்னதானப் பந்தல் சரிந்து விழுந்ததில் 10 போ் காயம்
ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் அன்னதானப் பந்தல் சனிக்கிழமை சரிந்து விழுந்ததில் 10 போ் காயமடைந்தனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூா் நாடியம்மன் கோயிலில் சனிக்கிழமை சரிந்து விழுந்த அன்னதானப் பந்தல்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் அன்னதானப் பந்தல் சனிக்கிழமை சரிந்து விழுந்ததில் 10 போ் காயமடைந்தனா்.
கீழாத்தூா் நாடியம்மன் கோயிலில் ஆடித் திருவிழாவையொட்டி மாதம் முழுவதும் தினமும் அன்னதானம் வழங்கப்படும். அதன்படி, சனிக்கிழமை அன்னதானம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென பலத்த காற்று வீசியதால், அங்கு அமைக்கப்பட்டிருந்த தகர பந்தல் எதிா்பாராத விதமாக சரிந்து விழுந்தது. அப்போது உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.
தொடா்ந்து, காயமடைந்தவா்கள், பந்தலுக்கு அடியில் சிக்கியிருந்தவா்களை பொதுமக்கள் உடனடியாக மீட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





