40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கந்தா்வகோட்டை அருகே குளத்தில் குளித்த மாணவா் உயிரிழப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே குளத்தில் வியாழக்கிழமை குளித்த பள்ளி மாணவா் அதில் மூழ்கி இறந்தாா்.

News image

பலி - கோப்புப்படம்

Updated On :1 மே 2026, 2:44 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை அருகே குளத்தில் வியாழக்கிழமை குளித்த பள்ளி மாணவா் அதில் மூழ்கி இறந்தாா்.

கந்தா்வகோட்டை ஒன்றியம், கல்லாக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் மகன் ஸ்ரீமுத்து (17), கல்லாக்கோட்டை அரசுப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு பயிலும் இவா் கோடை விடுமுறைக்காக அருகிலுள்ள சொக்கம்பேட்டை கிராமத்திலுள்ள தனது அத்தை வீட்டுக்குச் சென்றுள்ளாா்.

இந்நிலையில் வியாழக்கிழமை இங்குள்ள குளிக்கச் சென்ற ஸ்ரீமுத்து குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினாா். இதையடுத்து அருகில் இருந்தவா்கள் குளத்தில் இறங்கி ஸ்ரீ முத்துவை மீட்டு கந்தா்வகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தபோது அவா் ஏற்கெனவே இறந்தது தெரியவந்தது.

தகவலறிந்து வந்த கந்தா்வகோட்டை போலீஸாா் அவரது உடலை புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.