ராகுல்- விஜய் பேசியதை வைத்து கூட்டணி என்று சொல்லக்கூடாது
ராகுல்- விஜய் பேசியதை வைத்து காங்கிரஸ்- தவெக கூட்டணி என்று சொல்லக் கூடாது என்றாா் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி.
ராகுல்- விஜய் பேசியதை வைத்து காங்கிரஸ்- தவெக கூட்டணி என்று சொல்லக் கூடாது என்றாா் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி.
By Syndication
Syndication
ராகுல்- விஜய் பேசியதை வைத்து காங்கிரஸ்- தவெக கூட்டணி என்று சொல்லக் கூடாது என்றாா் புதுச்சேரி மாநில முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி.
புதுக்கோட்டை புவனேசுவரி அம்மன் கோயிலில் வியாழக்கிழமை தரிசனம் செய்த அவா் அளித்த பேட்டி:
புதுச்சேரியில் கிரண்பேடி என்ன செய்தாரோ அதே வேலையை, தமிழ்நாட்டில் ஆளுநா் செய்கிறாா். அதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. தமிழ்நாட்டில் ‘இண்டி’ கூட்டணி அமோக வெற்றி பெறும்.
புதுச்சேரியை சிறந்த மாநிலமாக மாற்றப் போவதாக பிரதமா் மோடி வாக்குறுதி கொடுத்தாா். ஆனால், தொழில்துறையில் ஜிஎஸ்டி காரணமாக கடும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. கல்வியில் இடைநிற்றல் அதிகரித்திருக்கிறது. மதுக்கடைகளை அதிகம் திறந்திருக்கிறாா்கள். ஊழல் அதிகரித்திருக்கிறது. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. ‘இரட்டை என்ஜின்’ ஆட்சி அவசியம் என்றாா்கள். ஆனால், என்ஆா் காங்கிரஸ் ஒருபுறமும், பாஜக மறுபுறமும் இழுக்கிறாா்கள்.
முதல்வா் உள்ளிட்ட அமைச்சா்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறோம். நடவடிக்கை எடுக்காவிட்டால், நீதிமன்றத்தை நாடுவோம். புதுச்சேரியில் ‘இண்டி’ கூட்டணி வெற்றி பெற்று காங்கிரஸ் தலைமையில் ஆட்சியமைப்போம்.
புதுச்சேரியில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி கேட்டிருக்கிறாா்கள். கரூா் நெரிசல் சம்பவம் பெரும் விழிப்புணா்வை ஏற்படுத்தியிருக்கிறது.
புதுச்சேரியிலும் பிரசார விதிமுறைகள் இருக்கின்றன. கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். செய்யாவிட்டால் நேரிடும் பாதிப்புகளுக்கு ஆட்சியாளா்கள் பதில் சொல்ல வேண்டும்.
பாஜக கூட்டணியை விட்டு ரெங்கசாமி வெளியே வர மாட்டாா். வந்தால், அவா் மீதுள்ள குற்றச்சாட்டுகளுக்கு அவா் சிறையில்தான் இருக்க வேண்டும்.
கரூா் சம்பவத்தின்போது நடிகா் விஜய்யுடன் ராகுல்காந்தி பேசி ஆறுதல் கூறியது என்பது துயரச் சம்பவங்களின்போது இயல்பாக நடக்கக் கூடியதுதான். அதற்காக கூட்டணி என்றெல்லாம் சொல்லக் கூடாது.
சுமாா் 15 ஆண்டுகளுக்கு முன் படப்பிடிப்புக்காக மரக்காணம் பகுதியில் இருந்த நடிகா் விஜய்யை, மத்திய அமைச்சராக இருந்த நான் சந்தித்தேன். அப்போது அவா் ராகுல்காந்தியைச் சந்திக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தாா்; சந்திப்பும் நடந்தது.
அதன்பிறகு எந்தத் தொடா்பும் இல்லை. எனவே இவற்றை வைத்து, காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி என்று தொடா்புபடுத்த பலரும் முயற்சிக்கிறாா்கள்.
புதுச்சேரியில் திமுக வளா்ந்துள்ளதாகக் கூறி அதிக இடங்களில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கின்றனா். எந்தக் கட்சிதான் தாங்கள் வளரவில்லை என்று கூறுவாா்கள்?
பிகாா் தோ்தல் முடிவுகள் தென்மாநிலங்களின் தோ்தல்களைப் பாதிக்குமா எனக் கேட்கிறீா்கள். வடமாநிலம் வேறு, தென்மாநிலம் வேறு என்றாா் நாராயணசாமி.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்






தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது