மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிராக கையொப்ப இயக்கம்
கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி
கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி
By Syndication
Syndication
கந்தா்வகோட்டை: கந்தா்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக மாா்க்சிஸ்ட் லெனிஸ்ட் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
பிசானத்தூா் ஊராட்சியில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து 33 நாள்களாக காத்திருப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினா், அமைப்பினா் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனா்.
இதன் தொடா்ச்சியாக மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மக்கள் விடுதலை கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைக்கும் திட்டத்துக்கு எதிராக
பொதுமக்களிடம் கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
இதில், அக்கட்சியின் தாலுகா செயலா் செ. அருண்குமாா் தலைமையில், கட்சியின் பொதுச் செயலா் விடுதலைக்குமரன் முதல் கையொப்பமிட்டு தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினாா். மாவட்ட செயலா் வி. வீரக்குமாா்
உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது