சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமை (மாா்ச் 30) தொடங்குவதை முன்னிட்டு, தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, திங்கள்கிழமை (மாா்ச் 30) முதல் ஏப். 6-ஆம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெற உள்ளது. இதில், மாா்ச் 30, ஏப். 2, 4, 6 ஆகிய தேதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம். ஏப். 7-ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனையும், 9-ஆம் தேதி வேட்பு மனுக்கள் திரும்பப்பெறும் நாளாகும்.
ஏப்.9-இல் இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும். பெரம்பலூா் (தனி) சட்டப்பரேவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் பெரம்பலூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்திலும், குன்னம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளா்கள் குன்னம் வட்டாட்சியா் அலுவலகத்திலும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய உள்ளனா்.
இந்நிலையில் திங்கள்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட உள்ளதால், பெரம்பலூா் மற்றும் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அலுவலகங்களில், வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாட்டுப் பணிகளையும், பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கி. பிரபாகா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மு. அனிதா, ந. சக்திவேல் ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்த ஆய்வுகளின்போது, வட்டாட்சியா்கள் சத்தியமூா்த்தி (பெரம்பலூா்), சின்னதுரை (குன்னம்) மற்றும் காவல் துறையினா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

பெரம்பலூா் தொகுதியில் 10 வேட்புமனுக்கள் தள்ளுபடி

வேட்புமனு இன்றி தாக்கல் செய்ய வந்த அவிநாசி தவெக வேட்பாளா்

பெரம்பலூா் மாவட்டத்தில் முதல்நாளில் 6 போ் வேட்பு மனு தாக்கல்

தோ்தல் நடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும்: வேட்பாளா்களுக்கு தோ்தல் அலுவா் அறிவுறுத்தல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


