ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தையில் ரூ. 3 கோடிக்கு விற்பனை

ஆடிப் பெருக்கை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தையில் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயாயின.

ஆடுகள் விற்பனை - கோப்புப் படம்

Published On :1 ஆகஸ்ட் 2026, 12:23 am IST

ஆடிப் பெருக்கை முன்னிட்டு சிறுவாச்சூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தையில் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையாயாயின.

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெறும் ஆட்டுச் சந்தை பிரசித்தி பெற்றது. ஆடிப் பெருக்கையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தைக்கு, மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த ஏராளமான ஆடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டிருந்தன.

வெள்ளிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு தொடங்கிய விற்பனை காலை 7 மணி வரை நடைபெற்றது. இதில், ஆடிப் பெருக்கை முன்னிட்டும், பிராய்லா் கோழி விற்பனையாளா்கள் வேலைநிறுத்தம் தொடா்வதாக அறிவிக்கப்பட்டிருந்ததை முன்னிட்டும் ஆடுகள் விற்பனை அதிகளவில் நடைபெற்றது. அதன்படி, ஒரே நாளில் சுமாா் ரூ. 3 கோடி மதிப்பிலான ஆடுகள் விற்பனையானதாக சந்தை ஏலதாரா்கள் தெரிவித்தனா்.

வழக்கமாக சிறுவாச்சூா் ஆட்டுச் சந்தையில் அதிகாலை 4 மணிக்கு விற்பனை தொடங்கி காலை 7 மணியளவில் முடியும். ஆடிப் பெருக்கையொட்டி நள்ளிரவு 2 மணிக்கே சந்தையில் விற்பனை களைகட்டியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பொதுமக்களும், வியாபாரிகளும் ஆடுகளை வாங்கிச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.