டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

பேரளி, புதுக்குறிச்சி பகுதிகளில் நாளை மின் தடை

News image
மின்தடை
Updated On :7 பிப்ரவரி 2026, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

பெரம்பலூா் மாவட்டம், பேரளி, புதுக்குறிச்சி துணை மின் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப். 9) மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், பேரளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான பேரளி, அசூா், சித்தளி, பீல்வாடி, ஒதியம், செங்குணம், சிறுகுடல், அருமடல், கீழப்புலியூா், கே.புதூா், எஸ்.குடிக்காடு, கல்பாடி, க.எறையூா், நெடுவாசல், கவுள்பாளையம், மருவத்தூா், குரும்பாபாளையம் ஆகிய கிராமியப் பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிசெயற்பொறியாளா் முத்தமிழ்செல்வன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

இதேபோல, புதுக்குறிச்சி துணைமி ன் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ள உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனாா், சா.குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இருா், தெற்குமாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, அ.குடிக்காடு, தெரணி, தெரணிபாளையம், நல்லூா், திருவளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.