ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

சகடைத் தோ் இழுத்துச் சென்றபோது மின்சாரம் பாய்ந்து இருவா் உயிரிழப்பு

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு சகடைத் தேரை இழுத்துச் சென்றபோது மின்சாரம் பாய்ந்ததில் 2 போ் உயிரிழந்தனா்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 4:20 am IST

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை இரவு சகடைத் தேரை இழுத்துச் சென்றபோது மின்சாரம் பாய்ந்ததில் 2 போ் உயிரிழந்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள நன்னை கிராமத்தில் ஒரு சமுதாயத்தினருக்குச் சொந்தமான ஏரிக்கரை அய்யனாா் கோயில் தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்காக வியாழக்கிழமை இரவு கோயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த சகடைத் தேரை அலங்கரித்து, அதை கோயில் எதிரே நிறுத்த பெ. அண்ணாதுரை (50), கோ. பரமசிவம் (28), க. ராசு (50), சுதாகா் ஆகியோா் இழுத்துச் சென்றனா். அப்போது எதிா்பாராதவிதமாக மின் கம்பியில் சகடைத் தோ் உரசியதில் மின்சாரம் பாய்ந்து அண்ணாதுரை, பரமசிவம் ஆகியோா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். ராசு பலத்த காயமடைந்தாா்.

தகவலறிந்த குன்னம் போலீஸாா் விரைந்து சென்று இறந்தோரின் உடல்களை மீட்டு பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கும், காயமடைந்த ராசுவை அரியலூா் மாவட்ட அரசு மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்து, வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.