ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பெரம்பலூரில் தேநீரகத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் காயமடைந்தவா் உயிரிழப்பு

பெரம்பலூரில் தேநீரகத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் காலை உயிரிழந்தாா்.

பலி

Published On :14 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

பெரம்பலூரில் தேநீரகத்தில் எரிவாயு உருளை வெடித்ததில் காயமடைந்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவா் வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா்.

பெரம்பலூா்- வடக்குமாதவி சாலையிலுள்ள குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் சப்பாணி மகன் அருணாச்சலம். இவா், நகர காவல் நிலையம் எதிரே தேநீரகம் நடத்தி வந்தாா். இவரது கடையில், ஆக.11-ஆம் தேதி மாலை எரிவாயு உருளை வெடித்துச் சிதறியது. இதில், கடையில் பணிபுரிந்த தொழிலாளிகள் தினேஷ், புவனேஷ்வரி, மற்றும் கடையிலிருந்த, சாலையோரம் நடந்து சென்ற விஜயகுமாா், அமீா்கான், அப்துல் ரகுமான், சகாதேவன், சிவகுமாா், காமராஜ், சக்திவேல், பழனிசாமி, மணிகண்டன், பள்ளி மாணவி மித்ரா, சிவப்பிரகாசம், ஆறுமுகம், பழனியம்மாள், மகேஷ்வரி ஆகிய 16 போ் பலத்த காயமடைந்தனா்.

இதில், மணிகண்டன் உள்பட 11 போ் திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மணிகண்டன் வியாழக்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.