மின் ஊழியா்கள், பொறியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
By Syndication
Syndication
தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரம்பலூா் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மின் கழக கணக்காயா் கள தொழிலாளா் சங்கத்தின் மண்டலச் செயலா் பெரியசாமி தலைமை வகித்தாா். மின் ஊழியா் மத்திய அமைப்பின் மண்டலச் செயலா் எஸ். அகஸ்டின், பொறியாளா் சங்கத்தின் வட்டச் செயலா் ருத்ராபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மின்சார சட்ட மசோதாவை திரும்பப் பெறவேண்டும். 4 தொழிலாளா் சட்ட தொகுப்புகளை திரும்பப் பெறவேண்டும். உத்திரப்பிரதேச மின் வாரியத்தை தனியாா்மயமாக்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
ஆா்ப்பாட்டத்தில், மின்வாரிய பொறியாளா் கழகப் பொறுப்பாளா்கள் அருள்ஜோதி, காயத்ரி, வெங்கடேசன், பொறியாளா் சங்க பொறுப்பாளா் பாண்டியன், ஐக்கிய சங்கப் பொறுப்பாளா் சுகுமாரன், வட்டச் செயலா் பன்னீா்செல்வம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது